சீனாவின் அதிகார நாடகத்தால் நேபாள ஆளும் கட்சியின் நிலைக்குழு 5 முறை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

காட்மாண்டு
நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவர் கட்சி தலைவராகவும் இருக்கிறார். ஆனால், கட்சியின் செயல் தலைவராக உள்ள முன்னாள் பிரதமர் பிரசாந்தா தலைமையில் இன்னொரு கோஷ்டி செயல்படுகிறது.
மக்களின் எதிர்பார்ப்புகளை சர்மா ஒலி பூர்த்தி செய்யவில்லை என்று கூறி, அவரை பதவி விலகுமாறு பிரசாந்தா ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக, இந்தியாவுக்கு சொந்தமான லிபுலேக், காலாபனி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை சேர்த்து நேபாள அரசு புதிய வரைபடம் உருவாக்கியதை பிரசாந்தா ஆதரவாளர்கள் விரும்பவில்லை. இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சர்மா ஒலி கூறி வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
நேபாள கம்யூனிஸ்டு கட்சியில் சக்திவாய்ந்த 45 உறுப்பினர் நிலைக்குழுவில் பெரும்பாலானோர் பிரதமர் சர்மா ஒலிக்கு எதிராகவே உள்ளனர். அவர் கடந்த வாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொண்டபோது, பிரச்சினை மேலும் தீவிரமானது.
சர்மா ஒலியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கம்யூனிஸ்டு கட்சி நிலைக்குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை நடப்பதாக இருந்தது. ஆனால், கருத்து வேறுபாடுகளை தீர்க்க தலைமைக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கும்வகையில், இக்கூட்டம் ஞாயிற்றுகிழமை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த கூட்டம் அது கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டு இன்று நடததப்படும் என அறிவிக்கப்பட்டது.
புதன்கிழமை சந்திக்க திட்டமிடப்பட்ட நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழுவின் கூட்டம் கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பிரதமர் கே.பி. சர்மா ஓலி மற்றும் பிரசாந்தா தலைமையிலான இரு அணிகளின் கருத்து வேறுபாடுகளை சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கையை இது மங்கச் செய்து உள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சியின் இணைத் தலைவர்களாக இருக்கும் பிரதமர் ஓலி மற்றும் பிரச்சந்தா ஆகியோர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சந்தித்து பேசினர். அப்போது ஓலி, தனது கட்சி பதவியை அல்லது பிரதமர் பதவியை கைவிட மறுத்துவிட்டார்.
இரண்டு மணி நேர சந்திப்பின் முடிவில் இரு தலைவர்களும் புதன்கிழமை நிலைக்குழு கூட்டத்தை முன்னெடுக்க ஒப்புக்கொண்டனர். 44 உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழுவை எதிர்கொள்ள பிரதமர் ஓலி தயாராக இருக்கிறார் என்விளக்கம் அளிக்கப்பட்டது. நிலைக்குழு உறுப்பினர்களின் கிட்டத்தட்ட 30 பேர் அவர் பதவி விலக வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
பிரதமர் ஓலிக்கு எதிராக பெரும்பான்மையான உறுப்பினர்களுடன் கட்சியின் நிலைக்குழுவின் கூட்டம் இன்று கூட திட்டமிடப்பட்டு இருந்தது அதுவும் சீனா தூதர் தலையீட்டால் தள்ளிவக்கப்பட்டது.
சீனாவின் அதிகார நாடகம் மற்றும் பிரதமர் ஓலியின் அரசியல் அபிலாஷைகள் காரணமாக, நேபாளத்தில் அரசியல் நெருக்கடி தொடருகிறது.
நேபாள அரசியலில் சீனாவின் பெரிய செல்வாக்கு அல்லது தலையீடு மிகவும் தெளிவாக உள்ளது, ஏனெனில் சீனா அரசியல்வாதிகளை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் இயக்குகிறது.