இங்கிலாந்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானபேர் கொரோனா காலகட்டத்தின்போது புகைபிடிப்பதை கைவிட்டுள்ளார்கள்.

லண்டன்
இங்கிலாந்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானபேர் கொரோனா காலகட்டத்தின்போது புகைபிடிப்பதை கைவிட்டுள்ளார்கள். லண்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் மற்றும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வு ஒன்றில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு ஏப்ரலின் மத்தியிலிருந்து ஜூன் இறுதிவரைக்குமான காலகட்டத்தில் நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் 11 லட்சம் பேர் இங்கிலாந்தில் புகைபிடிக்கும் பழக்கத்தைமுற்றிலுமாக கைவிட்டுவிட்டதோடு, மேலும் 440,000 பேர் புகை பிடிப்பதை விட முயற்சி செய்துகொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த தகவல் தங்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இளைஞர்களைப் பொருத்தவரை, வீட்டை விட்டு தொலைவில் இருக்கும்போது, மதுபான விடுதிகளுக்கு செல்லும்போது புகைபிடித்தவர்களும், வீட்டுக்கு தெரியாமல் புகை பிடித்தவர்களும் தற்போது கொரோனா ஊரடங்கால் வீடுகளுக்குள், குடும்பத்துடன் அடைந்திருக்க வேண்டிய சூழல் வந்ததால் புகைபிடிப்பதை விட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
என்றாலும், இன்னமும் புகைபிடிப்போரின் எண்ணிக்கையோ, இதைவிட ஐந்து மடங்கு அதிகம் என்ற கவலைக்குரிய செய்தியையும் வெளியிட்டுள்ளது அந்த ஆய்வு.