பப்புவா நியூ கினியா தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜகார்த்தா:
இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து எந்தவித சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என்று பொது மக்களுக்கான கூகுள் அலர்ட் முதலில் தெரிவித்து இருந்தது. ஆனால், நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து சுமார் 300கி. மீட்டர் தொலைவிற்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் வெளியாகவில்லை.