அமெரிக்காவின் பதற்றங்களுக்கு மத்தியில் சிறந்த வணிகச் சூழலை உருவாக்க சந்தை திறப்பை சீனா விரிவுபடுத்தும் என அதிபர் ஜி ஜின்பிங் வெளிநாட்டு நிறுவனங்களின் சீர்திருத்தத்திற்குகடிதம் எழுதி உள்ளார்.
பீஜிங்
பெரிய நிறுவனங்களின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி கவுன்சிலுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் எழுதிய கடிதத்தில், சீனா சீர்திருத்தங்களை ஆழமாக்குவதோடு, ஒரு ‘சிறந்த’ வணிகச் சூழலை உருவாக்க சந்தை திறப்பை விரிவுபடுத்தும் என கூறி உள்ளார்.
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்து அச்சுறுத்திய நிலையில், ஹாங்காங் தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் சின்ஜியாங் தொடர்பாக சீனா-அமெரிக்க பதற்றங்கள் சமீபத்தில் மீண்டும் அதிகரித்துள்ளன.
உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி கவுன்சிலின் உறுப்பினர்களான 18 பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் சீன அதிபருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் கொரோனா வைரஸ் வெடிப்பைக் கட்டுப்படுத்துவதில் சீனா மற்றும் ஷியின் தலைமையைப் பாராட்டி இருந்தனர்
அதற்கு பதில் கடிதம் எழுதி உள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் சீனா அமைதியான வளர்ச்சி பாதையில் தொடர்வதாகவும், ச உள்நாட்டு வர்த்தகத்தை திறப்பதை அதிகமாக்குவதாகவும் கூறி உள்ளார்.
மேலும் கடிதத்தில் வளர்ச்சியைத் தேடுவதற்காக சீனாவில் உங்கள் வணிக வேர்களை வைப்பதற்கான சரியான தேர்வை நீங்கள் எடுத்துள்ளீர்கள். சீன மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒரு சிறந்த வணிகச் சூழலை வழங்கும் அவர்களுக்கு உதவ புதிய வாய்ப்புகளையும் ஆராயும் என கூறி உள்ளார்.