விருதுநகர் மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி இதுவரை 284 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி நேற்றுவரை விருதுநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,295 ஆக இருந்தது.
இந்நிலையில் இன்றைய நிலவரப்படி இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 284 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை தற்போது 3,379 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தொற்று உறுதியானவர்களில் 16 பேர் கர்ப்பிணிகள் மற்றும் 9 பேர் சுகாதார பணியாளர்கள் ஆவர். தற்போது 2,289 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 1,065 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 25 பேர் கொரோனா பதிப்பால் உயிரிழந்துள்ளனர்.