கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த திமுக எம்.எல்.ஏ மஸ்தான், சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார்.

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏவான மஸ்தானுக்கு, கடந்த மாதம் 28ம் தேதி தொற்று உறுதியானது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.
இந்நிலையில் நேற்றிரவு அவரை மருத்துவமனை நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்துள்ளது. மேலும் அவரது மகள், பேரக்குழந்தை உள்பட குடும்பத்தினர் 5 பேர், தற்போது சிகிச்சையில் உள்ளனர்.