சுப்ரீம்கோர்ட்டில் ‘கொலிஜியம்’ என்று அழைக்கப்படுகிற மூத்த நீதிபதிகள் குழு 5 பேரை கொண்டதாகும்.

புதுடெல்லி,
சுப்ரீம்கோர்ட்டில் ‘கொலிஜியம்’ என்று அழைக்கப்படுகிற மூத்த நீதிபதிகள் குழு 5 பேரை கொண்டதாகும். இந்த குழுதான் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டுகளில் நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டியவர்களை தேர்வு செய்து, நியமனம் செய்வதற்கு பரிந்துரை செய்யும்.
இந்த குழுவில் இடம் பெற்றிருந்த தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ஆர்.பானுமதி ஓய்வு பெற்றுள்ளார்.
இதையடுத்து அவரது இடத்துக்கு நீதிபதி யு.யு.லலித் கொண்டு வரப்பட்டுள்ளார்.
இனி மூத்த நீதிபதிகள் குழு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஷ்ரா, ஆர்.எப்.நாரிமன், யு.யு.லலித் ஆகிய 5 பேரை கொண்டிருக்கும்.
நீதிபதி யு.யு.லலித் கடந்த 2014-ம் ஆண்டு, ஆகஸ்டு 13-ந் தேதி, மூத்த வக்கீலாக இருந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்பட்டவர் ஆவார். இவரது முழுப்பெயர் உதய் உமேஷ் லலித் என்பது குறிப்பிடத்தக்கது.