மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

Spread the love

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்தியப் பிரதேச கவர்னர் லால்ஜி தாண்டன் (வயது 85) உடல நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை காலமானார். இதனை அவரது மகன் அசுதோஷ் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

லால்ஜி டாண்டன் ஒரு திறமையான நிர்வாகி, பொது நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் என்றும் உத்தரபிரதேச பாஜகவின் வளர்ச்சியில் லால்ஜி டாண்டனின் பங்கு அளப்பரியது எனவும் பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page