சென்னையில் மேலும் 18 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு

Spread the love

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை,

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை முன்பை விட சற்று குறைந்துள்ளது. எனினும், கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கவலை அளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை 3 பேர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை தலா 3 பேர் தனியார் மருத்துவமனைகளில் ஒருவர் என மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page