மாஸ்க் அணியாமல் வெளியே சென்றால் மூன்று மாதம் கடினமாக உழைப்பை நூதன தண்டனையாக வட கொரியா அரசு விதித்துள்ளது.

சியோல்,
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் இந்த 8 மாத காலத்தில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி விட்டது. 1.47 கோடி பேரின் உடல்களில் இந்த வைரஸ் புகுந்து இருக்கிறது. 6 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களையும் காவு வாங்கி விட்டது.
கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் வடகொரியாவோ தங்கள் நாட்டில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று இப்போது வரை பிடிவாதமாக கூறி வருகிறது.
ஆனால், வல்லுனர்கள் சீனாவிற்கு அருகில் இருக்கும் நாடு நிச்சயமாக வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இருக்கும் என்றும் பொருளாதார தடையில் இருக்கும் வடகொரியாவிற்கு சீனா தான் ஆதரவு என்பதால், இந்த உண்மையை மறைத்து வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் வடகொரொரியாவில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனையாக மூன்று மாத கடின உழைப்பை அந்நாட்டு அரசு விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக வெளிவந்த ஒரு அறிக்கையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்துள்ளார்களா என்பதை கண்காணிக்க மாணவர்கள் குழு ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள். இதற்காக உயர்நிலை பள்ளி மாணவர்களை தயார்படுத்தி இருக்கிறார்கள்.
மாஸ்க் அணியாமல் யார் வெளியே வந்தாலும் பாரபட்சமின்றி அவர்களுக்கு மூன்று மாத கடின உழைப்பு தண்டனையாக வழங்கப்படும் என வட கொரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின் கீழ் உள்ளதாகவும் கூறப்படுகிறது.