சுற்றுலா நகரில் இருந்து 80 ஆயிரம் பேரை வெளியேற்றுகிறது வியட்நாம்

Spread the love

100 நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சுற்றுலா நகரில் இருந்து 80 ஆயிரம் பேரை வியட்நாம் வெளியேற்றுகிறது.


ஹனோய்,

கொரோனாவால் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அதே சமயம் தென் கொரியா,வியட்நாம், நியூசிலாந்து, தாய்லாந்து ஆகிய நாடுகள் கொரோனாவின் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துவிட்டன.

வியட்நாமில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோது அங்கு மிகக் கடுமையான ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

அந்த நாட்டில் 417 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். வியட்நாம் அரசின் தீவிர நடவடிக்கையால் அங்கு கொரோனாவால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை.

இந்த நிலையில் அந்நாட்டில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு 100 நாள்கள் கடந்துவிட்ட நிலையில் தற்போது புதிதாக 3 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மக்கள் தொகை அடிப்படையில் அந்த நாட்டின் 5வது மிகப்பெரிய நகரமான தனாங் நகரில்தான் தற்போது 3 கொரோனா தொற்று பேருக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர்கள் 3 பேரும் வெளி மாகாணங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ பயணம் செய்யாத சூழலில் அவர்களுக்கு வைரஸ் தொற்றுக்கு செய்யப்பட்டிருப்பது வியட்நாம் அரசு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே வியட்நாமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் தனாங் நகரில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள சுற்றுலா பயணிகள் 80 ஆயிரம் பேரை வெளியேற்ற அரசு முடிவு செய்துள்ளது.

தினமும் 100 விமானங்கள் மூலம் நாட்டிலுள்ள 11 இடங்களில் சுற்றுலா பயணிகளை இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான பணிகள் நடந்து முடிய 4 நாட்கள் ஆகும் என்றும் வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page