தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்த பிரியங்கா காந்தியை இரவு விருந்துக்கு அழைத்துள்ள பா,ஜனதா எம்.பி.

Spread the love

தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்த பிரியங்கா காந்தியை இரவு விருந்துக்கு அழைத்துள்ள பா,ஜனதா எம்.பி. அனில் பலூனி

புதுடெல்லி

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்டு, சிஆர்பிஎப் இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது.

இசட் பிளஸ் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்ட ஒருவருக்கு அரசின் சார்பில் வீடு வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை.

ஆதலால், டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள எண் 35, 5பி இல்லத்தை பிரியங்கா காலி செய்ய வேண்டும். ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் வீட்டைக் காலி செய்து தர வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் அல்லது வாடகை வசூலிக்கப்படும்” எனத் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர விவகாரத்துறை கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு இந்த வீடு கடந்த 1997-ம் ஆண்டு மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. ஏறக்குறைய 23 ஆண்டுகள் இந்த இல்லத்தில் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 1-ம்தேதிக்குள் பிரியங்கா காந்தி தான் தங்கியிருக்கும் வீட்டை காலி செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார். டெல்லியில் தங்கிக் கொள்ள குருகிராமில் செக்டர் 42 பகுதியில் தனியாக வீடு ஒன்றை தற்காலிகமாக பிரியங்கா காந்தி வாடகைக்கு எடுத்துள்ளார்.

பிரியங்கா காந்தி தங்கியிருந்த அரசு இல்லம், அவருக்குப்பின் பா.ஜனதா தேசிய ஊடகப்பிரிவு தலைவரும், எம்.பி.யுமான அனில் பலூனிக்கு மத்திய வீட்டுவசதித்துறை ஒதுக்கியது.

இந்நிலையில் தான் தங்கியிருந்த வீட்டுக்கு புதிதாக குடியேற இருக்கும் பா.ஜனதா எம்.பி. அனில் பலூனிக்கு தேநீர் விருந்தளிக்க பிரியங்கா காந்தி கடிதம் மூலம் அழைப்பு விடுத்து உள்ளார். அவரின் அலுவலகத்துக்கும் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு பதில் அளித்து பிரியங்கா காந்திக்கு கடிதம் அனுப்பி உள்ள எம்.பி “புற்றுநோய்க்கான சிகிச்சை முடிந்து நான் வீடு திரும்பி உள்ளேன் இப்போது, மருத்துவர்கள் என்னை வீட்டில் ஓய்வெடுக்கும் படி கேட்டு கொண்டுள்ளனர். லோதி பங்களாவிற்குள் நுழைந்தவுடன், இரவு விருந்துக்கு அழைப்பு விடுப்பதாக கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page