ஈராக்கில் 2 ராணுவ அதிகாரிகள் சுட்டுக்கொலை: ஐ.எஸ். பயங்கரவாதிகள் அட்டுழியம்

Spread the love

ஈராக்கில் 2 ராணுவ அதிகாரிகள், ஐ.எஸ். பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பாக்தாத்,

ஈராக் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அப்போதைய பிரதமர் ஹைதர் அல்அபாடி அறிவித்தார். ஆனால் சமீபகாலமாக அங்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளது.

இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்கொலைப்படை தாக்குதல் போன்ற அதிபயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒழிக்க ஈராக் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தரை மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் ஈராக்கின் மேற்கு பகுதியில் உள்ள ஹீத் நகரில் ராணுவ சோதனை சாவடி மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 ராணுவ அதிகாரிகளும், எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page