அமெரிக்காவில் நிமிடத்துக்கு ஒருவர் கொரோனாவால் பலி

Spread the love

அமெரிக்க நாட்டில் நிமிடத்துக்கு ஒருவர் கொரோனா பாதிப்புகளால் பலியாகின்றனர்.

 


வாஷிங்டன்,

அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்ந்து வெறியாட்டம் போடுகிறது. அங்கு நேற்று மாலை நிலவரப்படி தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 46 லட்சத்து 38 ஆயிரத்து 288 ஆக இருந்தது. பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 371 ஆக பதிவாகி இருந்தது.

கலிபோர்னியா, புளோரிடா, டெக்சாஸ் மாகாணங்களில் பலியில் தினமும் புதிய உச்சம் காணப்படுகிறது.

அமெரிக்காவில் கடந்த 2 நாட்களாக சராசரியாக 1,400-க்கு மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். இது, நிமிடத்துக்கு ஒருவர் பலி என்ற அளவில் இருக்கிறது. நேற்றும்கூட புளோரிடாவில் மட்டுமே 257 பேர் பலியாகினர்.

இதற்கு மத்தியில் அங்கு நவம்பரில் கொரோனா இறப்பு அளவு 2 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்து விடும் என்று ஒரு ஆய்வு முடிவில் தெரிய வந்து மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page