மராட்டியத்தில் கொரோனா பாதித்த போலீசார் எண்ணிக்கை 9,566 ஆக உயர்வு

Spread the love

மராட்டியத்தில் கொரோனா பாதித்த போலீசார் எண்ணிக்கை 9,566 ஆக உள்ளது என்று அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

மும்பை,

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் மராட்டியத்தில், அந்நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து காவல்துறையை சேர்ந்தவர்களும் தப்பவில்லை. மராட்டியத்தில் காவல்துறையை சேர்ந்த 9,566 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 7,534 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சயில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,929 என்று மராட்டிய காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் பலியான போலீஸார் எண்ணிக்கை மட்டும் 103 என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே கொரோனா வைரஸ் வழிகாட்டுதல்களை மீறியதற்காக கடந்த மார்ச் 22 முதல் 2,19,975 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மராட்டிய காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page