தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை

Spread the love

தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

இன்று முழு ஊரடங்கு நடைபெறுவதால், நேற்று (சனிக்கிழமை) மது விற்பனை அதிகமாக நடைபெற்றுள்ளது. நேற்று மதுபானக் கடைகளில் கூட்டம் அலை மோதியது. அந்த வகையில் நேற்று மட்டும் தமிழகத்தில் 188 கோடியே 86 லட்சம் ரூபாய்க்கு மதுமானம் விற்பனை நடந்துள்ளது.

அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 44 கோடியே 85 லட்சத்துக்கும், திருச்சி மாவட்டத்தில் 42 கோடியே 72 லட்சத்துக்கும், சேலம் மாவட்டத்தில் 40 கோடியே 70 லட்சத்துக்கும், சென்னையில் 21 கோடியே 69 லட்சத்துக்கும், கோவையில் 38 கோடியே 90 லட்சத்துக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த வார சனிக்கிழமை மட்டும் 177 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த வார சனிக்கிழமை( நேற்று) 188 கோடியே 86 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page