டிக் டாக்கை மைக்ரோசாப்ட் வாங்குவது உறுதி; செப்டமபர் 15 ந்தேதிக்குள் ஒப்பந்தம்

Spread the love

டிக் டாக்கை வாங்குவதை மைக்ரோசாப்ட் உறுதிபடுத்தியது; செப்டமபர் 15 ந்தேதிக்குள் ஒப்பந்தமாகிறது.


வாஷிங்டன்

சீனாவுக்குச் சொந்தமான பிரபல டிக் டாக் நிறுவனத்தை அமெரிக்காவில் தடை செய்ய இருப்பதாக அமெரிக்க ஜனாதொபதி டிரம்ப் அண்மையில் தெரிவித்தார். உலக அளவில் மிகவும் பிரபலமான க டிக் டாக், ஏற்கனவே இந்தியாவில் தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவும் தடை விதிக்கும் அபாயம் ஏற்பட்டதையடுத்து, மாற்று வழிகளை டிக் டாக் நிறுவனத்தின் தாய் அமைப்பான பைட் டான்ஸ் நிறுவனம் யோசிக்கத் தொடங்கியது.

அதன்படி, டிக் டாக் நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை மட்டும் பிரபல மைக்ராசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தன. எனினும், டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பதில் டிரம்ப் உறுதியாக இருந்ததால், பைட் டான்ஸ் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தி வைத்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் , டொனால்டு டிரமபை மைக்ரோசாப்ட் சி இ ஓ சத்ய நாதெல்லா சந்தித்து பேசினார்.

மைக்ரோசாப்ட் டிக்டாக்கை அமெரிக்காவில் வாங்குவதற்காக சீன தொழில்நுட்ப நிறுவனமான பைட் டான்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை உறுதிப்படுத்தியது.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மைக்ரோசாப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் இது தொடர்பாக மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறது. அமெரிக்க அரசுடன் ஒரு ஒப்பந்தபோடப்பட்டு உள்ளதாகவும் செப்டம்பர் மாதம் 15ந்தேதிற்குள் பேச்சுவார்த்தைகளை முடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page