அமெரிக்காவில் ஜாகிங் செய்த இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் மர்ம மரணம் அடைந்துள்ளார்.

டெக்சாஸ்,
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பிளேனோ சிட்டியில் வசித்து வந்தவர் சர்மிஸ்தா சென். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், பார்மசிஸ்டாக இருப்பதுடன் ஆராய்ச்சியாளராகவும் இருந்து வந்துள்ளார்.
தடகள வீராங்கனையாகவும் இருந்த சென், தினமும் காலையில் தனது 2 குழந்தைகள் எழுவதற்கு முன் ஜாகிங் போகும் வழக்கம் கொண்டவராக இருந்துள்ளார்.
இந்நிலையில், ஜாகிங் சென்ற அவரை காணவில்லை. அவரது உடல் லெகசி டிரைவ் பகுதியருகே கண்டெடுக்கப்பட்டது. அவர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் அவர் மரணம் அடைந்திருக்க கூடும் என கூறப்படுகிறது.
இந்த வழக்கில், பகாரி அபியோனா (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை நடந்தபொழுது, அருகிலுள்ள வீடு ஒன்றில் கொள்ளை சம்பவமும் நடந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னின் மறைவுக்கு பின், அவருடைய நண்பர்கள், அருகே வசிப்போர் மற்றும் வழிபோக்கர்கள் என நூற்றுக்கணக்கானோர் அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.