கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா

Spread the love

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இதனையடுத்து ஒருவார சிகிச்சைக்கு பிறகு எடியூரப்பாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து பார்த்ததில் நெகட்டிவ் என முடிவுகள் வந்தன. மேலும் நெஞ்சு பகுதியில் இருந்த சளியும் முழுமையாக குறைந்துள்ளது.

இந்நிலையில் அவர் சிகிச்சை முடிந்து இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மருந்துவனைமயில் இருந்து புறப்பட்டபோது அவருக்கு மருத்துவர்கள், ஊழியர்கள் வாழ்த்துக் கூறி வழியனுப்பி வைத்தனர்.

தற்போது நலமடைந்துள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள முதல்-மந்திரி எடியூரப்பா கூறியதாவது:-

வாழ்த்துகள் கூறியவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். உங்கள் வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. மருத்துவமனையில் சுய தனிமைப்படுத்தலுக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளேன். மேலும் உங்களுடைய ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றியுடையவனாக இருப்பேன். விரைவில் இயல்பு பணிகளுக்குத் திரும்புவேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page