50 நாடுகளுடன் பயணிகள் விமான போக்குவரத்து – சீனா தொடங்கி விட்டது

Spread the love

50 நாடுகளுடன் பயணிகள் விமான போக்குவரத்தினை சீனா தொடங்கி விட்டது.

Air China BEJ 777-300ER Artwork
K64495

பீஜிங்,

உலக நாடுகளுக்கு எல்லாம் கொரோனா வைரஸ் தொற்றை பரப்பி விட்டு, இப்போது சீனா தன் நாட்டில் அதை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. இந்த தொற்று பரவலைத்தொடர்ந்து சர்வதேச விமான சேவை பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. ஆனால் சீனாவில் வெளிநாடுகளுடனான சிவில் விமான போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது

அங்கு இப்போது 50 நாடுகளுடன் பயணிகள் விமான சேவை நடந்து வருகிறது. இதுபற்றி சீன சிவில் விமான போக்குவரத்து துணை இயக்குனர் உ ஷிஜி கூறுகையில், “ஆகஸ்டு 12-ந் தேதி நிலவரப்படி, 50 நாடுகளுடனும், பிராந்தியங்களுடனும் சீன சிவில் விமான போக்குவரத்து நடந்து வருகிறது. 93 விமான நிறுவனங்கள் (19 சீன நிறுவனங்கள், 74 அன்னிய நிறுவனங்கள்) 210 திரும்பும் விமான சேவையையும், 187 வழக்கமான தடங்களில் வாரம்தோறும் மேற்கொள்கின்றன” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page