கிம் ஜாங்கின் சகோதரி கிம் யோ ஜாங் திடீர் மாயம் என்ன ஆனார்…?

Spread the love

வடகொரியாவின் புதிய தலைவாரக முடிசூட்டப்படுவார் என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் கிம் ஜாங்கின் சகோதரி கிம் யோ ஜாங் திடீரென்று மாயமாகியுள்ளார்.

சியோல்

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியான நிலையில்,சகோதரி கிம் யோ-ஜாங் தனது சர்வாதிகார சகோதரரால் பழிவாங்கப்படுவார் என்ற பயத்தில் மாயமாகியிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.கடந்த சில மாதங்களில் 32 வயதான கிம் யோ வடகொரிய ஆட்சி அதிகாரங்களில் முக்கிய பொறுப்புகளுக்கு கொண்டுவரப்பட்டார்.

 

சகோதரர் கிம் ஜாங் உடன் பொது நிகழ்ச்சிகளில் அடிக்கடி தென்பட்டார். மட்டுமின்றி, தென் கொரியாவுக்கு எதிரான கடுமையான அறிக்கைகளையும் அவர் வெளியிட்டார்.இந்த நிலையிலேயே, கடந்த வாரம், தென் கொரியாவின் முக்கிய உளவுத்துறை நிபுணர் ஒருவர், கிம் ஜாங் தமது சகோதரியுடன் ஆட்சியை பகிர்ந்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியிட்டார்.

ஆனால் அந்த தகவல் வெளியான பின்னர் ஜூலை 27 முதல் கிம் யோ பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை எனவும்,பொதுவாக சகோதரர் கிம் ஜாங் கலந்துகொள்ளும் முக்கிய நிகழ்வுகளில் தென்படும் கிம் யோ, புதனன்று வெளிய்டிடப்பட்டுள்ள புகைப்படங்களில் இல்லை எனவும்,பொலிட்பீரோ உறுப்பினரான கிம் யோ, சமீபத்திய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரியவந்துள்ளது.மேலும், கிம் யோ தமது தாய்மாமனுக்கு நேர்ந்தது தமக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என அஞ்சுவதாகவே கூறப்படுகிறது.

தமது சகோதரரை விட அதிக செல்வாக்கு கொண்டவராக ஊடகங்களால் தாம் சுட்டிக்காட்டப்படுவதை கிம் யோ விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.கிம் சகோதரர்களின் தாய்மாமா ஜாங் சாங்-தைக், முன்பு வட கொரியாவின் மிக சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக திகழ்ந்தவர்.ஆனால் 2013 டிசம்பர் மாதம், அவரின் மொத்த பொறுப்புகளும் பறிக்கப்பட்டு, ஆட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.இதே நிலை, தமக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்றே கிம் யோ தற்போது அடக்கிவாசிக்கத் தொடங்கியதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொரியப் போர் ஆயுதத்தின் 67 வது ஆண்டு விழாவில் இராணுவத் தலைவர்களுக்கு நினைவுத் துப்பாக்கிகளை வழங்கியபோது, கடந்த மாதம் ஹெர்மிட் கிங்டம் ஹான்ச்சோவின் அருகே நின்றபோது அவர் கடைசியாகக் காணப்பட்டார்.

ஆனால் கொரோனா தொற்றுநோயைப் பற்றி விவாதிக்க மற்றும் ஒரு சூறாவளிக்குத் தயாராவதற்காக கிம் செவ்வாயன்று கூட்டிய உயர் மட்டக் கூட்டத்தில் அவர் அரசு அனுமதித்த புகைப்படங்களில் அவர் காணப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page