கிம் ஜாங் இறந்திருக்கலாம் – அமெரிக்கா; கோமாவில் – தென் கொரியா தகவல்களை பொய்யாக்கும் புகைப்படங்கள்

Spread the love

கிம் ஜாங் இறந்திருக்கலாம் -அமெரிக்கா; கோமாவில் – தென் கொரியா கூறிய நிலையில் புகைப்படங்களை வெளியிட்டு வடகொரியா அவர் உயிருடன் இருப்பதாக கூறி உள்ளது.

சியோல்

வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன் தீவிர மன அழுத்தம் காரணமாக தன்னுடைய பொறுப்புகள் சிலவற்றை சகோதரியிடம் ஒப்படைத்துள்ளதாக செய்தி வெளியானது.அதைத் தொடர்ந்து தென் கொரியாவின் மறைந்த ஜனாதிபதி கிம் டே ஜாங் முன்னாள் உதவியாளரான ஜாங் சாங் மின் வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன் கோமா நிலையில் இருக்கிறார்.ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறாரா என்பது குறித்து உறுதியாக கூற முடியவில்லை என்று கூறினார்.

 

இதையடுத்து தற்போது அவர் இறந்திருக்கலாம் என்ற ஊகங்கள் மீண்டும் எழுந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு இப்படி தான் பொது வெளியில் கிம் ஜாங் உன் தென்படாததால், அவர் இறந்துவிட்டார் என்று செய்தி வெளியானது.

ஆனால், அதை எல்லாம் உடைக்கும் வகையில், நாட்டில் உரத்தொழிற்சாலை திறப்பு விழாவில் கிம் கலந்து கொண்டு, இறப்பு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.இதையடுத்து தற்போது அந்த ஊகம் மீண்டும் எழுந்துள்ளது.

கடந்த வாரம் தன்னுடைய பேஸ்புக் பதிவில் ஜாங் சாங் மின் ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து கிம் கோமா நிலையில் இருப்பதாகவும், அவரது பொது தோற்றங்கள் அனைத்தும் மாநில ஊடகங்களால் போலியானவை என்றும் குறிப்பிட்டார்.

கிம்மால் ஒரு முழுமையான அடுத்தடுத்த கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை. அந்த வெற்றிடத்தை நீண்ட காலத்திற்கு பராமரிக்க முடியாததால் சகோதரியான கிம் யோ-ஜாங் இப்போது முன்னிலைக்கு கொண்டு வரப்படுகிறார் என்று தெரிவித்திருந்தார்.

தென் கொரிய செய்தி வலைத்தளமான ஷின்மூங்கோ சாங்கின் கூற்றை அபத்தமானது என்று குறிப்பிட்டுள்ளது.இந்த ஊகம் கிளம்புவதற்கு முக்கிய காரணம், வடகொரியாவில் உருவாகியுள்ள புதிய இணை தளம் தான், அதில் புகைப்பிடித்தல் குறித்த புதிய ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, நாட்டில் புகைபிடித்தல் எதிர்ப்பு ஆராய்ச்சி மையம் நாட்டின் கணினி வலையமைப்பு அமைப்பில் புகை எதிர்ப்பு 1.0 என்ற வலைத்தளம் சமீபத்திய வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த தளம் புகைபிடிப்பதைத் தவிர்ப்பது குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக துவங்கப்பட்டுள்ளது.

ஏனெனில் கிம் அடிக்கடி புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர், இதனால் நிச்சயமாக அவர் இதை செய்திருக்க முடியாது என்று கூறப்படுவதால், இந்த யூகம் மீண்டும் கிளம்பியுள்ளது.

வடகொரியாவின் முக்கிய பிராந்தியங்களில் கடந்த இரு தினங்களுக்கு மேலாக மழையும் பலத்த காற்றும் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.இதனிடையே பவி சூறாவளியும் புரட்டியெடுக்க, பொதுமக்களும் விவசாயிகளும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகினர்.இந்த நிலையிலேயே, கிம் ஜாங் உன் பாதிப்புக்கு உள்ளான விவசாய நிலங்களை பார்வையிட்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடி உள்ளார்.

கொரோனா பரவல் அச்சுறுத்தல் வடகொரியாவில் கட்டுக்குள் இருப்பதாக அறிவித்திருந்த கிம் ஜாங் விவசாயிகளுடன் மாஸ்க் ஏதும் அணியாமலே உரையாடுகிறார்.மட்டுமின்றி, நோயாளி போல் இல்லாமல் சுறுசுறுப்பாகவே கிம் ஜாங் காணப்படுகிறார்

சுமார் 10 நாட்களுக்கு முன்னரே, தென் கொரிய உளவு அமைப்பு, கிம் ஜாங் ஆழ்ந்த கோமாவில் இருக்கிறார் எனவும், ஆட்சி அதிகாரங்களை தமது சகோதரியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் எனவும் தகவல் வெளியிட்டது.

மட்டுமின்றி சமீப நாட்களில் தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான கொள்கைகளை வடகொரியா சார்பில் வகுப்பது கிம் யோ எனவும் தகவல் வெளியானது.ஆனால், ஆட்சி அதிகாரங்களை சகோதரியுடன் பகிர்ந்து கொண்டதன் நோக்கம் நோய் காரணம் அல்ல எனவும் வேலை தொடர்பான மன அழுத்தம் குறைப்பதற்காகவே என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page