பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை, டீசல் விலை குறைப்பு

Spread the love

சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.

 


சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த மார்ச் மாத மத்தியில், டீசல் விலை குறைக்கப்பட்டது. அதன்பிறகு, கலால் வரி உயர்த்தப்பட்டதால், டீசல் விலை 82 நாட்களாக மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.

ஜூன் 7-ந்தேதியில் இருந்து மீண்டும் டீசல் விலை உயர்த்தப்பட்டது. அப்போதிருந்து ஜூலை 25-ந்தேதிக்குள் லிட்டருக்கு ரூ.12.55 உயர்த்தப்பட்டது. ஜூலை 25-ந்தேதிக்கு பிறகு டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. டெல்லியில் மட்டும் வாட் வரி குறைக்கப்பட்டதால், டீசல் விலை குறைந்தது.

சுமார் 6 மாதங்களுக்கு பிறகு, முதல்முறையாக கடந்த 3 ஆம் தேதி டீசல் விலை நாடு முழுவதும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில் பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலையான 85.04-க்கே விற்பனையாகிறது. டீசல் விலை 13 காசுகள் குறைந்து ரூ.78.58-க்கு விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page