பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 25 போலீசாரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Spread the love

பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 25 போலீசாரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் காவல் நிலையம், தனிப்பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பா.ஈஸ்வரன், காஞ்சீபுரம் தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கோ.தனபால், மதுரை மாநகரம், கூடல்புதூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த நீலமேகம், சென்னை பெருநகரக் காவல், சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரிவில் முதல் நிலை பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த வ.எழிலரசி, யானைகவுனி காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த மு.சுரேஷ்.

 

பட்டாபிராம் காவல் நிலையம் சட்டம்-ஒழுங்குப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ர.வெங்கடேசன், மாதவரம் போக்குவரத்து காவல் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஜெ.மோகன், துறைமுகம் காவல் நிலைய சட்டம்-ஒழுங்குப் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கோ.ஹரிகிருஷ்ணன், சென்னை பெருநகரக் காவல், புதுப்பேட்டை, பணியிடைப் பயிற்சி மையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த க.சேகர், வேப்பேரி, குற்ற ஆவணக் காப்பகத்தில் பெண் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த எஸ்.சாந்தி, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த அ.அன்பரசன்.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த நடராஜன், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சி.ராமச்சந்திரன்; திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஆர்.பன்னீர்செல்வம், நாகப்பட்டினம் மாவட்டம், திருவெண்காடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த அலெக்ஸாண்டர், சேலம் மாவட்டம், மாநகர காவல் துறையில் வடக்கு போக்குவரத்துப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த து.அம்பேத்கார் ஆகியோர் உடல்நல குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மதுரை மாநகரம், கீரைத்துறை காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த க.சிவக்குமார், ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்த ராஜேஸ்கண்ணன், மதுரை மாவட்டம், தல்லாகுளம் போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரிந்து வந்த ஆயுதப்படை முதல் நிலை பெண் காவலர் ஜோதி, திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த அ.தங்கபாண்டி, ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்த கே.பி.கார்த்திக், சென்னை பெருநகரக் காவல், புதுப்பேட்டை, ஆயுதப்படையில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ப.ராஜா; புனித தோமையர் மலை போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கா.நடராஜன்.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த டி.சேகர், ஆயுதப்படையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கே.உலகநாதன் ஆகியோர் பல்வேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். உடல்நல குறைவு மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேற்கண்ட பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page