தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை ஊரை சேர்ந்தவர் சுபாஷ்பண்ணையார். பனங்காட்டு மக்கள் கழகம் கட்சியின் தலைவர். இவர் 24.9.20 நேற்று நடந்த தினத்தந்தி அதிபர்சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திட வருவதாக அறிவித்திருந்தார்.
ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவில்லை.அதேவேளையில் அவரது கட்சி தொண்டர்கள் பலரும் சிவந்தி ஆதித்தனார் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்நிலையில் நேற்று (24.9.2020) செய்துங்கநல்லூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஆட்டோவில்பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் சுற்றித்திரிந்த மர்ம வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர்.
காவல்துறையினரின் விசாரணையில் அவர்கள் பனங்காட்டு மக்கள் கழகம் தலைவர் சுபாஷ் பண்ணையாரின் உயிருக்கு குறிவைத்து வந்துள்ளதாக தகவல்கள் தெரியவந்தது. இது குறித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே உள்ள பகைக்கு பழிதீர்க்கும் வகையில் ஒரு டீம் அமைக்கப்பட்டு, அதில் சுமார் 40 லிருந்து 50 வரையிலானவர்கள் இந்த வேலையில் இறங்கியிருப்பதாகவும், பனங்காட்டு மக்கள் கழக தொண்டர்கள் போலவே பனியன்கள் அணிந்து கொண்டு வந்த அவர்கள், சுபாஸ்பண்ணையார் வரவில்லை என்பதை அறிந்து திரும்பியதாகவும், அப்போது போலீஸிடம் பிடிபட்டிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே திருச்செந்ந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவான அனிதாராதாகிருஷ்ணனுக்கும் பனங்காட்டு மக்கள் கழகம் தலைவர் சுபாஸ் பண்ணையாருக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வரும் நிலையில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கிடையே நாளை 26.09.2020 அன்று வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவங்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.