சீனாவுடனான மோதலை எதிர்கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்காவின் கூட்டு தேவைப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்
கிழக்கு லடாக் எல்லையில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.அதை எதிர்கொள்வதற்காக இந்தியாவும் படை வலிமையை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் டோக்கியாவில் நடைபெற்ற குவாட் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ நிருபர்களிடம் வாஷிங்டனில் கூறியதாவது:-
“நான் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த எனது வெளியுறவு மந்திரி சகாக்களை சந்தித்தேன் நாங்கள் குவாட் என்று அழைக்கும் ஒரு குடையின் வடிவம், நான்கு பெரிய ஜனநாயக நாடுகள், நான்கு சக்திவாய்ந்த பொருளாதாரங்கள் இதில் உள்ளன. அவை சீனாவின் அச்சுறுத்தல் உள்ளது.
சீனா இந்தியாவின் வடகிழக்கில் 60,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களைக் குவித்துள்ளது. சீனாவுக்கு அதன் அருகிலேயே வலிமையான எதிர்ப்பு வளர்ந்து வருகிறது.
இந்த மோதலை எதிர்கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்காவின் கூட்டு உறுதியாகத் தேவைப்படும் “இந்த போராட்டத்தில் அமெரிக்கா அவர்களின் கூட்டாளியாகவும் பங்காளியாகவும் இருக்க வேண்டும் என கூறினார்.