சமத்துவ மக்கள் கழகம் திருவொற்றியூர் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்*
திருவள்ளூர் வடக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பாக திருவொற்றியூர் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று எர்ணாவூர் காமராஜர் மாளிகையில் நிறுவனர் தலைவர் எர்ணாவூர் நாராயணன் Ex.Mla அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மதுரைவீரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். பகுதி செயலாளர் முத்துகுமார் , மாவட்ட துணை செயலாளர் பி.ரவி அவர்கள் முன்னிலையில் திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வார்டு உறுப்பினர்களையும் தலைவர்களை சந்தித்து வருகின்ற சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசித்து கருத்துக்களை வழங்கினார் .தலைவர் அவர்கள் பேசும்போது தேர்தல் பணி குறித்தும், தொகுதியின் குறைபாடுகள் குறித்து கலந்து ஆலோசித்து தொகுதி பிரச்சனைகளை விரைந்து முடிக்க 10 தீர்மானங்கள் நிறைவேற்றினார்.
திருவொற்றியூர் தொகுதியில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சடையங்குப்பம் மேம்பாலப் பணி முடித்திட வேண்டும்
மணலி விரைவு சாலையில் போக்குவரத்து போலீஸாரின் அலட்சியத்தால் எண்ணூர் விரைவு சாலையில் தினம்தினம் உயிரிழப்புகள் தடுத்திட வேண்டும்
எண்ணூர் மீனவர் மக்கள் தூண்டில் வளைவு அமைக்க போராடி வருகின்றனர் செவி சாய்க்காதா தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும்
திருவொற்றியூர் நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக உள்ள சாலையை செப்பனிட்டு, மெட்ரோ ரயில் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்
மணலி திருவொற்றியூர் இணைக்கும் பக்கிங்காம் கால்வாய் மேம்பால பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது எளிய மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்
அண்ணாமலை நகர் உட்பட இரண்டு இடங்களில் சுரங்கபாதை விரைந்து அமைத்திட வேண்டும்
உள்ளிட்ட பல்வேறு 10 கோரிக்கைகளை முன்வைத்து தலைவர் அவர்கள் கூட்டத்தில் பேசினார்
இக்கூட்டத்தில் பொருளாளர் கண்ணன், மாணவரணி செயலாளர் கார்த்திக், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, கொள்கை பரப்பு செயலாளர் சுந்தரேசன், இளைஞரணி துணை செயலாளர் ஏ.பி வெற்றிவேல், மாநில மகளிரணி நிர்வாகிகள் மாலதி, தேவி, தொழிற்சங்க பொருளாளர் முகமது இசாக் மாவட்ட செயலாளர்கள் லார்டு பாஸ்கர் மற்றும் அனைத்து வார்டு பகுதி கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு கலந்து கொண்டனர்.