கொரோனா தடுப்பூசியை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பது சவாலான விஷயம்- ஆய்வில் தகவல்.

Spread the love

கொரோனா தடுப்பூசியை உலகம் முழுவதும் பரவலாக கொண்டு சேர்ப்பது பெரும் சவாலான விஷயம் என ஆய்வில் தெரியவந்து உள்ளது.

லண்டன்

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், தொற்றுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உலக நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தயாரிக்கப்படும் தடுப்பூசியை உலகம் முழுவதும் விநியோகிப்பதில் சிக்கல் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தற்போது உள்ள நிறுவனங்களில் வெறும் 28 சதவிகிமான நிறுவனங்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசிகளைக் கையாளத் தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது.

சர்வதேச சரக்கு விமான சங்கம் மற்றும் பார்மா.ஆரோ ஆகியோரால் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் மேற்குறிப்பிட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றிருந்த 181 நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசியை நீண்ட தொலைவுக்கு கொண்டு செல்ல ஏற்றவாறு குளிர்சாதன வசதி கொண்ட போக்குவரத்து வாகனங்களை தயார் நிலையில் வைத்துள்ளன. ஆனால், ஏறக்குறைய கால் பகுதியினர் தாங்கள் இன்னும் இதுபோன்ற உபகரணங்களை வாங்க முயற்சிக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

உற்பத்தித் தளங்களிலிருந்து உலகெங்கிலும் உள்ள சுகாதார கிளினிக்குகளுக்கு மருந்தை கொண்டு சேர்ப்பதற்கு பொறுப்பானவர்களின் தயார்நிலை மிக முக்கியமானது, ஏனென்றால் ஒரு முறை போக்குவரத்துக்கு உட்பட்ட அளவுகள், உலக பொருளாதாரத்தில் பயணிக்கும்போது, அவை மிகவும் குளிராக இருக்க வேண்டும். தொற்று நோயின் தொடக்க காலத்தில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் (PPE) பற்றாக்குறை எவ்வாறு இருந்தது என உலக நாடுகள் உணர்ந்திருந்தன. இந்நிலையில் இதுபோன்ற சிக்கல்கள் தவிர்க்கப்பட முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியமாகிறது.

“தளவாடத் தொழில் இன்று அல்லது எப்போதாவது எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் இதுதான்” என்று மியாமி சர்வதேச விமான நிலையத்தின் விமான வர்த்தக மற்றும் தளவாடங்களின் மேலாளரும், தியாகா என அழைக்கப்படும் சங்கத்தின் உறுப்பினருமான எமிர் பினெடா கூறியுள்ளார். “விநியோகச் சங்கிலி பல இணைப்புகளால் ஆனது, அந்த இணைப்புகளில் ஒன்று உடைந்தாலும், எங்களுக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது.” என்றும் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசியானது உலகம் முழுவதும் பரவலாக கொண்டு சேர்ப்பது பெரும் சவாலான விஷயம். தடுப்பூசியின் அளவானது ஒட்டு மொத்தமா 65,000 டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது 2019-ல் வான் வழியாக கொண்டு சேர்க்கப்பட்ட ஒட்டு மொத்த சரக்கு அளவை விட நான்கு மடங்கு அதிகம் என்றும் பினெடா கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page