உலகம் முழுவதும் கொரோனா தீவரமாக பரவி வரும் நிலையில் விமானத்தில் பயணம் மேற்கொள் மக்கள் பயந்து வரும் நிலையில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

வாஷிங்டன்
உலகம் முழுவதும் கொரோனா தீவரமாக பரவி வரும் நிலையில் விமானத்தில் பயணம் மேற்கொள் மக்கள் பயந்து வருகின்றனர்.விமான பயணிகளின் பயத்தை போக்கி அவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் அமெரிக்க ஆய்வின் முடிவகள் வெளியாகியுள்ளது.
அதாவது, பயணிகள் முகக் கவசம் அணிந்தால் விமானங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் ஆபத்து மிகக் குறைவு என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நீண்ட தூர ஜெட் விமானங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், விமானத்தின் காற்றோட்டம் அமைப்புகள் மூலம் ஆறு நிமிடங்களுக்குள் 99% க்கும் மேற்பட்ட துகள்கள் கேபினிலிருந்து வடிகட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
எவ்வாறாயினும், சோதனையானது விமானத்தில் ஒரே ஒரு பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே இருந்த சூழலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சோதனைகள் சில வரம்புகளைக் கொண்டிருந்தாலும், முடிவுகள் ஊக்கமளிக்கின்றன என்று சோதனையில் ஈடுபட்டவர்களில் ஒருவரான ஜோசப் போப் தெரிவித்தார்.