அப்படியே சாப்பிடலாம்: கழற்ற வேண்டும் வந்திடுச்சு ஜிப் போட்ட முகக்கவசம்

Spread the love

இனி முகக்கவசத்தை கழற்ற வேண்டாம் அப்படியே சாப்பிடலாம். புதிய ஜிப் வைத்த முககவசத்தை ஒரு உணவு விடுதி அறிமுகப்படுத்தி உள்ளது.

கொல்கத்தா:

கொல்கத்தாவில் உள்ள ஒரு உணவகம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஜிப் அம்சத்துடன் கூடிய தனித்துவமான முகக்கவசங்களை வழங்குவதற்கான ஒரு புதுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.

பெரும்பாலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது முகக்கவசத்தை அணிய மறந்து விடுகிறார்கள். இதனால் பல இடங்களில் அவர்களை அனுமதிப்பதில்லை. இப்படிப்பட்ட நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஒரு உணவகம் ஜிப் வைத்த முககவசங்களை வழங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பொது இடங்களில் முகக்கவசம் அணிவது ஒரு தினசரி பழக்கமாக வேண்டும் என்பதே இந்த உணவகத்தின் குறிக்கோள்

முகக்கவசம் கட்டாயமாக்கப் பட்டுள்ளதால், அவை ஒரு ஜிப் அம்சத்துடன் வந்தால், அவற்றை அகற்ற வேண்டிய அவசியமே ஏற்படாது என உணவக உரிமையாளர் சோமோஷ்ரீ சென்குப்தா கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:-

“முகக்கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. ஆகையால் நீங்கள் இங்கே உணவை உண்ணும்போது, ​​ஜிப் அவுட் செய்து சாப்பிடுங்கள், நீங்கள் சாப்பிட்டு முடித்ததும், ஜிப் இன் செய்யுங்கள். இந்த தனிச்சிறப்பு வாய்ந்த முகக்கவசங்களை சாப்பிடும்போது கழற்றாமல் போட்டுக்கொண்டே இருக்கலாம்.

நாங்கள் கூடுதல் கட்டணம் இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு இந்த மாஸ்குகளை வழங்குகிறோம். இருப்பினும், இது கட்டாயமில்லை. அவர்கள் விரும்பினால் அவர்கள் அதை அணியலாம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page