ஆயுத பூஜை விஜயதசமி சமத்துவ மக்கள் கழகம் தலைவர் A.நாராயணன் வாழ்த்து!
வணிகர்களும் தொழிலாளர்களும் போற்றி வணங்கும் ஆயுத பூஜையும் வெற்றித்திருநாள் விஜயதசமி கொண்டாடும் அனைவருக்கும் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நவராத்திரி நாட்களில்
நவராத்திரி நாட்களில் அரக்கன் மகிஷாசுரனை தேவி வதம் செய்த நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதம் 9ம் தேதி (அக்டோபர் 25) நவமி திதியில், அன்னையின் ஆயுதங்களை பூஜை செய்த நாள் ஆயுத பூஜையாகவும், தசமி திதியில் பத்தாம் நாள் அசுரனை அழித்த தேவியின் வெற்றியை கொண்டாடும் விதமாக (அக்டோபர் 26) ‘விஜயதசமி’ கொண்டாடப்படுவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.அரக்கனை வதம் செய்தது போன்று கொரோனா நோய் தொற்று விரட்டி அடிக்க வேண்டும் என்றும் மக்கள் சமூக இடைவெளியுடன் , கொண்டாட வேண்டும் என சமத்துவ மக்கள் கழகம் தலைவர் A.நாராயணன் கேட்டுக்கொண்டுள்ளார்.