கோயம்பேடு பூ மற்றும் பழ மார்க்கெட் திறக்கும் தேதியை அரசு அறிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வனிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை,
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயம்பேடு பூ மற்றும் பழ மார்க்கெட் திறக்கப்படாமல் உள்ளது. வியாபாரிகளின் நலன் கருதி இதனை திறக்க வேண்டும் எனவும் அரசு விதிமுறைகளை பின்பற்ற தயாராக இருப்பதாகவும் வனிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பண்டிகை காலத்தில் இரவு 12 மணி வரை கடைகளை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் கோயம்பேடு பூ மற்றும் பழ மார்க்கெட்டை திறக்கும் தேதியை ஆரசு அறிவிக்க வேண்டும் என்றும் மறுக்கும் பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.