மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு குறித்து அரசிதழில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். அதையடுத்து பல்வேறு தரப்பினர் நெருக்கடியால் கடந்த 30 ஆம் தேதி 7.5% உள் ஒதுக்கீடுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் 18ம் தேதிக்கு மேல் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே, அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் அளித்து நீலகிரி பேசிய முதல்வர் பழனிசாமி, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தர சட்டம் இயற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார் என தெரிவித்தார்.
இந்த நிலையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசிதழில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 7.5% உள் இட ஒதுக்கீடு சட்டமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
த்தார்.