தமிழன் தொலைக்காட்சி நிருபர் மோசஸ் படுகொலை-சமத்துவ மக்கள் கழகம் கண்டனம்

Spread the love

தமிழன் தொலைக்காட்சி நிருபர் மோசஸ் படுகொலை-சமத்துவ மக்கள் கழகம் கண்டனம்


காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோசஸ் (வயது 27). இவர் தமிழன் தொலைக்காட்சியில் நிருபராகப் பணியாற்றி வந்தார். கடந்த வாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமுக விரோதச் செயல்கள் நடைபெறுவதைச் செய்தியாக வெளியிட்டிருந்தார். இதனால் நிருபருக்குக் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இதுகுறித்து  காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், நேற்று (08-11-2020) இரவு வீட்டில் இருந்த மோசஸை வீட்டுக்கு வெளியே வரவழைத்த ரவுடி கும்பல் ஒன்று, அவரை வெட்டிப் படுகொலை செய்துள்ளது.இந்தக் கொடூரப் படுகொலையை சமத்துவ மக்கள் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
பத்திரிகையாளர்களின் சுதந்திரமா செயல் பட வேண்டும் .பாதுகாப்பு இல்லாத நிலையின்  இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்தப் படுகொலை தொடர்பாக விக்னேஷ், மனோஜ், ஆதி, ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கஞ்சா வியாபாரி நவமணியை உட்பட அனைவரையும் காலம் தாழ்த்தாமல் குண்டர் சட்டத்தில் பதிய வேண்டும்
பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பத்திரிகையாளர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.படுகொலை செய்யப்பட்டபத்திரிகையாளர்  மோசஸ் குடும்பத்திற்கு அரசின் சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனத் தமிழக அரசை சமத்துவ மக்கள் கழகம் வலியுறுத்துகிறது.
பலியான நிருபர் மோசஸ் மறைவுக்கு சமத்துவ மக்கள் கழகம்  சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. என்று சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவர் A.நாராயணன் ( EX MLA) அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page