நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதியில் அனைவருக்கும் இலவச செல்போன் – நவீன் பட்நாயக் அறிவிப்பு

Spread the love

நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதியில் அனைவருக்கும் இலவச செல்போன்கள் வழங்கப்படும் என்று ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

புவனேஸ்வர்,

ஒடிசாவின் மல்கங்காகிரி மாவட்டம் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி. நக்சலைட்டுகளின் ஆசைவார்த்தைக்கு மயங்கி பலர் அவர்களுக்கு உதவி வருகிறார்கள். இதனை தடுத்து நிறுத்தவும், அந்தப்பகுதியில் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளவும் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதற்கிடையே மலங்காகிரி மாவட்டத்தில் உள்ள 52 வருவாய் கிராமங்களில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முதல்-மந்திரி காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்து மக்களுடன் பேசினார். அப்போது அவர், ‘நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதியில் வாழும் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக செல்போன் வழங்கப்படும். இந்த பகுதியில் ஏற்கனவே 4 செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 இடங்களில் 4ஜி செல்போன் கோபுரங்கள் அமைக்கப்படும்.

எல்லா கிராமங்களுக்கும் கான்கிரீட் சாலைகள் அமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது 42 அங்கன்வாடி மையங்களை அமைக்கவும் சுகாதார துணை மையங்களை இப்பகுதியில் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது அப்பணி விரைவில் முடிவடையும். இப்பகுதியில் உள்ள இடதுசாரி தீவிரவாதிகள் வன்முறையை கைவிட்டு விட்டு இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கான முயற்சிகளை மக்களுடன் இணைந்து நிறைவேற்ற முன்வரவேண்டும்’ என்று தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page