பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

Spread the love

23-வது பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.


பெங்களூரு,

23-வது பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், “23-வது பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு-கண்காட்சி பெங்களூருவில் இன்று தொடங்குகிறது.

3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலமாக பங்கேற்று தொடங்கி வைக்கிறார். இதில் ஆஸ்திரேலிய பிரதமர், சுவிட்சர்லாந்து துணை அதிபர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

இதில் முதல்-மந்திரி எடியூரப்பா, தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள். இதற்கு முன்பு நடைபெற்ற 22 தொழில்நுட்ப மாநாடுகளில் அனைவரும் நேரில் கலந்து கொண்டனர். ஆனால் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக அனைத்தும் காணொலி காட்சி மூலம் நடக்கிறது. 25-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த கண்காட்சியை மிகுந்த எதிர்பார்ப்புடன் உற்று நோக்குகின்றன.

100-க்கும் அதிகமான புதிய தொழில்கள், சுமார் 4,000 தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் 70-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் நடக்கின்றன. 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி பொருட்களை இந்த கண்காட்சியில் அரங்குகளை அமைத்து வெளிப்படுத்துகின்றன. இந்த கண்காட்சியின்போது, பிற நாடுகளுடன் கர்நாடகம் 7 ஒப்பந்தங்களில் கையெழுத்திட முடிவு செய்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page