ஐ.ஐ.டி. 2020 சர்வதேச மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி அனைத்து துறையிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என உரையாற்றினார்.
புதுடெல்லி,
ஐ.ஐ.டி. 2020 உலக மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி அனைத்து துறையிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என உரையாற்றினார்.
பிரதமர் மோடி ஐ.ஐ.டி. 2020 உலக மாநாட்டில் காணொலி காட்சி வழியே இன்று உரையாற்றினார். அதில் அவர் பேசும்பொழுது, பணியாற்றும் வழிகளில் கடல் அளவு மாற்றங்களை இந்தியா பார்த்து வருகிறது.
ஒருபோதும் நடக்காது என நாம் நினைத்த விசயங்கள் அதிவிரைவுடன் நடந்து வருகின்றன. சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் உருமாற்றம் ஆகிய கொள்கைகளில் எங்களுடைய அரசு முழு அளவில் ஈடுபட்டு வருகிறது.
சீர்திருத்தங்கள் எந்த துறையிலும் விடுபட்டு போகவில்லை. கொரோனா தொற்றுக்கு பின்னர் மீண்டும் படித்தல், மீண்டும் நினைவுகொள்ளல் மற்றும் மீண்டும் கண்டுபிடித்தல் என்ற நிலை இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.