கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த விசாரணைக்கு உத்தரவு … அமெரிக்காவிற்கு சீனா கண்டனம்..!

Spread the love

கொரோனா வைரசின் தோற்றம் குறித்த விசாரணைக்கு அமெரிக்கா உத்தரவிற்கு ; அரசியலக்கப்படுவதாக சீனா கண்டனம் தெர்வித்து உள்ளது ஜோ பைடன் உத்தரவு; சிக்கலில் சீனா?


வாஷிங்டன்

சீனாவின் உகான் நகர ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.கொரோனா வைரஸ் உகான் நகரில்தான் தோன்றியது என்பதை தொடர்ந்து சீனா மறுத்து வருகிறது.

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலக நாடுகளையெல்லாம் உலுக்கி விட்டது. இன்றளவும் அதற்கு எதிராக உலகமே ஒன்றிணைந்து யுத்தம் நடத்தி வருகிறது.

கொரோனா அறிகுறிகளைக் கொண்ட முதல் நோயாளி உகானில் 2019 டிசம்பர் 8 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாக சீனா உலக சுகாதார நிறுவனத்திற்குத் தெரிவித்தது.

சர்வதேச ஊடகங்கள் பல உகான் நகருக்குச் சென்று செய்தி சேகரித்து விஞ்ஞானிகளைப் பேட்டிகண்டு ஆவணப் படங்களையும் வெளியிட்டு உள்ளன்ம.

கொரோனா தொற்று குறித்து சீனா அறிவிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னரே, அதன் உகான் நகர வைராலஜி ஆய்வக விஞ்ஞானிகள் மருத்துவ உதவியை நாடியதாக, அமெரிக்க உளவுத்துறை அறிக்கையை மேற்கோள் காட்டி, வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் செய்தி வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில் கொரோனா தொற்றுநோயின் மூலத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை தீவிரபடுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் 90 நாட்களுக்குள் இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

ஜோ பைடன் தேவைப்பட்டால், மேலதிக விசாரணையில், சீனாவிடன் சில கேள்விகளை முன் வைப்பது குறித்தும், விசாரணை குழுவிடம் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பதை ஆராயும் முயற்சியில் எங்கள் தேசிய ஆய்வகங்கள் மற்றும் எங்கள் அரசாங்கத்தின் பிற ஏஜென்சிகள், உளவுத்துறையினர், இதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளேன். இது தொடர்பான பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முழுமையாக தெரிவிக்கும்படி நான் புலனாய்வு பிரிவிடம் கூறியுள்ளேன்.

முழுமையான, வெளிப்படையான, சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச விசாரணையில் பங்கேற்கவும், கொரோனா தொடர்புடைய அனைத்து புள்ளிவிவ்ரங்கள் மற்றும் ஆதாரங்களை வழங்கவும் சீனாவிற்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா, ஒத்த எண்ணம் கொண்ட உலகின் நட்பு நாடுகளுடன் தொடர்ந்து செயல்படும் என அறிக்கையில் ஜோ பைடன் கூறி உள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீனாவின் அமெரிக்க தூதரகம் கொரோனாவின் தோற்றத்தை அரசியலாக்குவது மேலதிக விசாரணைகளுக்கு இடையூறாகவும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று கூறி உள்ளது.

வாஷிங்டனில் உள்ள தூதரகம் புதன்கிழமை மாலை தனது இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “சில அரசியல் சக்திகள் அரசியல் கையாளுதல் மற்றும் குற்றம் குறித்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தொற்றுநோயின் தோற்றம் பற்றிய விசாரணையில், நம்பிக்கையை வளர்ப்பதற்கு வெளிப்படைத்தன்மை இருப்பது மிகவும் முக்கியம்.

உலகளவில் பரவும் கொரோனாவின் அனைத்து ஆரம்ப நிகழ்வுகளையும் பற்றிய விரிவான ஆய்வையும், உலகெங்கிலும் உள்ள சில ரகசிய தளங்கள் மற்றும் உயிரியல் ஆய்வகங்கள் பற்றிய முழுமையான விசாரணையையும் ஆதரிப்பதாகக் கூறி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page