ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியின் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று… தனிமைப்படுத்திக்கொண்ட ஆப்கானிஸ்தான் அதிபர்
காபூல்:
ஆப்கானிஸ்தானில் அதிபர் மாளிகையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் சுமார் 20 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், 40 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அதிபர் அஷ்ரப் கனி தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அதிபரின் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.