கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், சுகாதார பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து வழங்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.
சென்னை,
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போலீசார், சுகாதார பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து வழங்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. வைட்டமின் சி, ஜிங்க் மாத்திரைகளை 10 நாட்களுக்கு தினமும் ஒன்று வழங்க சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.
மேலும், கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியவற்றை வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.