உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 8 லட்சத்து 32 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவில் இருந்து 8 லட்சத்து 32 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீட்பு
ஜெனீவா:
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 32 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 29 லட்சத்து 10 ஆயிரத்து 298 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்பு படம்
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 18 லட்சத்து 75 ஆயிரத்து 126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 178 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த கொடிய வைரசுக்கு 2 லட்சத்து 2 ஆயிரத்து 671 பேர் பலியாகியுள்ளனர்.
ஆனாலும், இந்த கொடிய கொரோனாவில் இருந்து மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் உலகம் முழுவதும் இதுவரை 8 லட்சத்து 32 ஆயிரத்து 501 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் விவரங்கள்:-
அமெரிக்கா – 1,16,015
ஸ்பெயின் – 95,708
இத்தாலி – 63,120
பிரான்ஸ் – 44,594
ஜெர்மனி – 1,09,800
துருக்கி – 25,582
ஈரான் – 68,193
சீனா – 77,346
பிரேசில் – 27,655
பெல்ஜியம் – 10,417
கனடா – 16,320
ஸ்விட்சர்லாந்து – 21,300
ஆஸ்திரியா – 12,103