காற்று மாசுபாடு குறைந்ததால் தாமாக மூடிக்கொண்ட ஓசோன் படல மிகப்பெரிய துளை

Spread the love

ஓசோன் படலத்தில் நடப்பாண்டு ஏற்பட்ட மிகப்பெரிய துளையானது தாமாக மூடிக்கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

லண்டன்

சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளை பூமிக்கு வராமல் தடுக்கும் இயற்கை அரணாக ஓசோன் படலம் விளங்குகிறது. பூமியை சுற்றிலும் காணப்படும் இந்த ஓசோன் எனப்படும் ஆக்சிஜன் படலமானது (O3),சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

ஆனால், வாகனங்களின் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன் மோனாக்ஸைடு உள்ளிட்ட மாசுகாற்றுகளால் ஓசோன் படலத்தில் கடந்த காலங்களில் ஆங்காங்கே பெரிய பெரிய துளைகள் ஏற்பட்டன. இந்த சூழ்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவியதால் இந்தியாஉள்பட பல நாடுகளில் வெவ்வேறுகால கட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு நாடுகளில் இயங்கி வந்த தொழிற்சாலைகள் கால வரையின்றி மூடப்பட்டன. வாகனப் போக்குவரத்து இல்லை. இதனால் பூமியில் இருந்து வெளியாகும் மாசுக்களின் அளவும் வெகுவாக குறைந்தது.

பூமியில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்தால் ஓசோன் படலத்தின் துளைகள் குறைந்துள்ளதா என்பது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கடந்த மாதம் ஆராய்ச்சி செய்தனர். ஆனால், பூமியின் வடதுருவமான ஆர்ட்டிக்கின் மேற்பகுதியில் இருக்கும் ஓசோன் படலத்தில், ஒரு மில்லியன் சதுர கிலோ மீட்டர் அளவில் பெரிய துளை புதிதாக உருவாகியிருந்தது. மேலும், இந்த துளையானது தென் துருவத்தை நோக்கி விரிவடைந்தும் வந்தது. இந்த செய்தியானது உலக மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், இந்த துளை தொடர்பாக செயற்கைக்கோள் உதவியுடன் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அதிசயிக்கும் விதமாக ஓசோனில் ஏற்பட்டிருந்த அந்த ராட்சத துளை தாமாக மூடிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஐரோப்பிய மையத்தின் (ஈ.சி.எம்.டபிள்யூ.எஃப்) கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை (சி 3 எஸ்) மற்றும் கோப்பர்நிக்கஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவை (சிஏஎம்எஸ்) ஆகியவை இதனை உறுதிப்படுத்தின.

ஓசோன் படலத்தில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய துளை தாமாக மூடிக்கொண்டதற்கு, பூமியில் இருந்து வெளியாகும் காற்று மாசுபாடு அளவு குறைந்ததே காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர், ஆனால், இந்தக் கூற்றினை விஞ்ஞானிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

ஓசோனில் மிகப்பெரிய துளை ஏற்பட்டதும் அதுதாமாக மூடியதும் போலார் வோர்டெக்ஸ் எனப்படும் வாயு சுழற்சியே காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page