மேற்கில் ஆதிக்கம் செலுத்துவதற்காக அணுசக்தியால் இயங்கும் ஸ்கிஃப் ஏவுகணையை வடிவமைத்துள்ள ரஷ்யா
மாஸ்கோ:
மேற்கில் ஆதிக்கம் செலுத்துவதற்காக ஆபத்தான ஆயுதங்களை அதிகபடுத்தும் ரஷ்யா இப்போது உலகின் மிகப்பெரிய ஸ்கிஃப் ஏவுகணை என்று அழைக்கப்படுவதை வடிவமைத்துள்ளது.
ரஷ்யாவின் ஆபத்தான அணுசக்தியால் இயங்கும் ஸ்கிஃப் ஏவுகணை கடலோரத்தில் உள்ளது. என்றும் கிழக்கு மற்றும் மேற்கு இடையே ஒரு போர் வெடித்தால் கடைசி முயற்சியாக இதைப் பயன்படுத்தலாம் என்றும் டெய்லி ஸ்டார் தெரிவித்துள்ளது.
செயல்படுத்தப்பட்டதும், ஸ்கிஃப் ஏவுகணை 6,000 மைல் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும். இது 60-மைல் வேகத்தில் பயணிக்க கூடியது. கோபால்ட் -60 என்ற செயற்கை கதிரியக்கத்தால் கடல் மற்றும் கரையின் பெரிய பகுதிகளை மாசுபடுத்தும்.
பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த ஏவுகணை ரஷ்யாவை தோற்கடிக்க முடியாது என்று உலகிற்கு ஒரு செய்தியை அனுப்பும் நோக்கம் கொண்டதாக உள்ளது.