உலகம் முழுவதும் 2.5 லட்சத்தை நெருங்கும் உயிரிழப்பு- கொரோனா அப்டேட்ஸ்

Spread the love

உலகம் முழுவதும் 35 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை நெருங்கி உள்ளது.

உலகம் முழுவதும் 2.5 லட்சத்தை நெருங்கும் உயிரிழப்பு- கொரோனா அப்டேட்ஸ்

ஜெனிவா:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து வெளிப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை குணப்படுத்தும் வகையிலான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனினும் எந்த மருந்தும் இன்னும் உலக அளவில் சந்தைக்கு வரவில்லை. எனவே, இந்த வைரசின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இன்று மதிய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2.5 லட்சத்தை நெருங்கி உள்ளது. 35 லட்சத்து 67 ஆயிரத்து 561 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 லட்சத்து 48 ஆயிரத்து 333 பேர் மரணம் அடைந்துள்ளனர். 11 லட்சத்து 57 ஆயிரத்து 275 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் 21 லட்சத்து 61 ஆயிரத்து 953 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 50 ஆயிரத்து 54 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மொத்த உயிரிழப்பை விளக்கும் வரைபடம்

அமெரிக்கா, மெக்சிகோ, உக்ரைன், பிரேசில் ஆகிய நாடுகளில் புதிய நோய்த்தொற்று இன்று மேலும் அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 68,602
ஸ்பெயின் – 25,264
இத்தாலி – 28,884
பிரிட்டன் -28,446
பிரான்ஸ் – 24,895
ஜெர்மனி – 6,866
ரஷியா – 1,280
துருக்கி – 3,397
பிரேசில் – 7,051
ஈரான் – 6,203
சீனா – 4,633
கனடா – 3,682
பெல்ஜியம் – 7,844
பெரு – 1,286
இந்தியா – 1,395
நெதர்லாந்து – 5,056
சுவிட்சர்லாந்து – 1,762
ஈக்வடார் – 1,564
போர்ச்சுகல் – 1,043
மெக்சிகோ – 2,154
ஸ்வீடன் – 2,679
அயர்லாந்து – 1,303.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page