கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும்- டொனால்டு டிரம்ப்

Spread the love

இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைத்து விடும் என்று ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்

வாஷிங்டன் டி.சி.யில் உள்ள லிங்கன் மெமோரியலில் இருந்து ஒளிபரப்பப்பட்ட ஒரு பாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசும் போது கூறியதாவது:-

இந்த ஆண்டின் இறுதியில் ஒரு தடுப்பூசி கிடைத்து விடும் என்று நாங்கள் நம்புகிறோம். செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும். மாணவர்கள்-மாணவிகள் கல்வி கற்க செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அமெரிக்க ஆராய்ச்சியாளர்களை விட வேறொரு நாடு தடுப்பூசியை கண்டுபிடித்தது என்றால் நான் அவர்களுக்கு வாழ்த்து கூறுவேன். நல்ல வகையில் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page