உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 11 லட்சத்து 60 ஆயிரம் பேர் குணமடைந்தனர்.
கொரோனாவில் இருந்து 11 லட்சத்து 60 ஆயிரம் பேர் மீட்பு
ஜெனீவா:
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 11 லட்சத்து 60 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 35 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு 2 லட்சத்து 48 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரஸ் பரவியவர்களில் 11 லட்சத்து 60 ஆயிரத்து 80 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-
அமெரிக்கா – 1,78,594
ஸ்பெயின் – 1,48,558
இத்தாலி – 81,654
பிரான்ஸ் – 50,784
ஜெர்மனி – 1,32,700
ரஷியா – 18,095
துருக்கி – 63,151
பிரேசில் – 42,991
ஈரான் – 78,422
சீனா – 77,766
கனடா – 24,908
பெல்ஜியம் – 12,378
பெரு – 13,550
இந்தியா – 11,707
சுவிட்சர்லாந்து – 24,500
மெக்சிகோ – 13,447
அயர்லாந்து – 13,386
சிலி – 10,041
ஆஸ்திரியா – 13,228