அமெரிக்காவில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 1 லட்சம்வரை நெருங்கும் என ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.
வாஷிங்டன்
சீனாவின் உகான் நகரில் உருவாகிய கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவில் ஏற்படுத்திய பாதிப்பை விட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் தான் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
உலக அளவில் கொரோனா தொற்று இறப்பு விகிதத்தில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் தினமும் சராசரியாக 2,000 பேர் மரணமடைந்துள்ளனர். அமெரிக்கா-வியட்நாம் இடையான போரில் இறந்த அமெரிக்கர்களை விட தற்போது கொரோனாவால் இறந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகமாகும். கொரோனா வைரசால் அமெரிக்கா கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவ்ல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பேசும் போது
அமெரிக்காவில் கொரோனா வைரசால் 68,598 பேர் பலியான நிலையில் இறப்பு எண்ணிக்கை 1 லட்சம் வரை நெருங்கும் என்று நான் நினைக்கிறேன். ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராடுவோம். மேலும், செப்டம்பர் இறுதிக்குள் கொரோனாவுக்கு மருந்து கண்டுப்பிடிக்கப்படும் என கூறினார்.