உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2.55 லட்சம் ஆக உயர்ந்துள்ளது.
வாஷிங்டன்,
கொரோனா வைரஸ் என்னும் கொலைகார தொற்றினால் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காமல் பலியானோர் எண்ணிக்கை நேற்று மாலை நிலவரப்படி 2 லட்சத்து 55 ஆயிரத்தை கடந்து செல்கிறது.
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தரவு மையத்தின் தகவல்படி, அதிகளவிலான உயிர்ப்பலியை சந்திக்கிற நாடாக அமெரிக்கா நீடிக்கிறது. அங்கு 70 ஆயிரத்து 700-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியில் 29 ஆயிரத்துக்கு அதிகமானோரும், இங்கிலாந்தில் 29 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோரும், ஸ்பெயினில் 25 ஆயிரத்து 600-க்கும் கூடுதலானோரும் உயிரிழந்திருப்பதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்று நோய் என கடந்த மார்ச் 11-ந் தேதி உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.