ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ரசாயான தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து 10 பேர் உயிரிழப்பு என் .ஆர் .தனபாலன் இரங்கல்
சென்னை.மே :07:ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ரசாயான தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து 10 பேர் உயிரிழந்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் .ஆர் .தனபாலன் கூறியுள்ளார் .இது குறித்து அவர்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகேயுள்ள ஆலையிலிருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டதில் 2 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் .இன்னும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து ரோடுகளில் சாய்வதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றேன் .
ஏற்கனவே கொரோனா நோயால் கடந்த 45 நாட்களாக ஊரடங்கில் வாழ்வாதாரம் இழந்து தவித்த ஆந்திரா மக்களை இன்று விஷவாயு தாக்கி மரணப்படுக்கையில் .வைத்திருப்பது வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுவது போன்றதாகும் விஷவாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திரா மாநில அரசும் மத்திய அரசும் தலா 25 லச்சம் நிவாரண உதவிகளை வழங்கிடவேண்டும் .அதே நேரத்தில் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ செலவை முழுமையாக ஆந்திரா மாநில அரசு ஏற்க முன்வரவேண்டும் .
விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்துமா சாந்தியடையவும் அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் .இவ்வாறு என் .ஆர் .தனபாலன் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார் .