பெருந்தலைவர் காமராஜர் சிலை அவமதிப்பு
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தேக்கம்பட்டி கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜர் சிலையை அவமதித்தந்தை கண்டித்து பனங்காட்டு மக்கள் கழகம் தலைவர் S.A .சுபாஷ் பண்ணையார் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தேக்கம்பட்டி கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜர் சிலையை சிலைக்கு நேற்று இரவு சில சமூக விரோதிகள் செருப்புமாலை அணிவித்து இழிவுபடுத்தி அவமதித்திருக்கிறார்கள்.இத்தகைய படுபாதக செயலை பனங்காட்டு மக்கள் கழகம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்று பொற்கால ஆட்சி நடத்திய மனிதப் புனிதர் பெருந்தலைவர் காமராஜரின் சிலையை அவமதித்து இழிவுபடுத்திய சமூக விரோத செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளின் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது மற்றவர்களையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.அப்படி நடவடிக்கை எடுக்க தவறினால் சேலம் மாவட்ட பனங்காட்டு மக்கள் கழகம் சார்பாக சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன்.என்று கூறியுள்ளார்.